பகீர்... ஆசனவாயில் மிளகாய்.. சிறுவர்களுக்கு நேர்ந்த அட்டூழியம்!

 
பாகிஸ்தான்

உத்தர பிரதேசம் மாநிலத்தில் சிறுவர்கள் இருவருக்கு, ஆசனவாயில் மிளகாய் தேய்த்தும், சிறுநீரை அருந்த வலியுறுத்தியும், மர்ம ஊசிகளை செலுத்தியும் சித்திரவதை செய்தது இணையம் வாயிலாக இந்தியர்களை பதறச் செய்துள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் சித்தார்த் நகரில் நேற்று முன்தினம் நிகழ்ந்ததாக சொல்லப்படும் இந்த சம்பவம், சமூக ஊடகங்கள் வாயிலாக தேசத்தை கலங்கடிக்கச் செய்துவருகிறது. அண்மையில் மணிப்பூர் மாநிலத்தில் 2 பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு, ஊர்வலம் மற்றும் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளானது தொடர்பான வீடியோ இந்திய மக்களை கொதிக்கச் செய்தது. அந்த வரிசையில் 10 மற்றும் 15 வயதேயான இரு சிறுவர்களுக்கு, உத்தர பிரதேசத்தில் நிகழ்ந்திருக்கும் கொடுமை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தான் சிறுவன்

பணத்தை திருடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் 2 சிறுவர்களை பிடித்து, அடித்து விசாரிக்கும் ஒரு கும்பல், அதன் பின்னர் வரம்பு மீறிய கொடும் சித்திரவதைகளை அரங்கேற்றுகிறது. பச்சை மிளாகாயை கடித்து விழுங்குமாறு கட்டாயப்படுத்துவோர், சிறுவர்கள் காரம் தாங்காது தவிக்கையில் சிறுநீரை தந்து வலுக்கட்டாயமாக அதனை பருகச் செய்கிறார்கள். மேலும் சிலர் சிறுவர்களின் ஆடையை கீழிறக்கி ஆசன வாயில் அரைத்த மிளகாயை வைத்து தேய்க்கின்றனர். இவற்றின் உச்சமாக மஞ்சள் திரவம் அடங்கிய ஊசிகள் சிறுவர்களுக்கு வலுக்கட்டாயமாக செலுத்தப்படுகின்றன. அந்த மஞ்சள் திரவம் சிறுநீராக இருக்கலாம் என இணையவாசிகள் பதறுகின்றனர்.

க்ரைம்

இந்த வீடியோ இணையத்தில் வலம் வந்த பிறகே உத்தர பிரதேச போலீஸார் நடவடிக்கையில் இறங்கினர். காட்டுமிராண்டி நடவடிக்கைகளில் ஈடுபட்ட முகமது சௌத், அப்துல், பாப்பு, தீபக் குப்தா, உபைத், அகிப் என 6 பேரை கைது செய்ததுடன், மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். கொலை முயற்சி, இயற்கைக்கு மாறான பாலியல் நடவடிக்கை, போக்சோ உள்ளிட்ட கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மனித தன்மையற்ற கொடூரங்கள் அடங்கிய வீடியோ பொதுவெளியில் பகிர்வதற்கும் இயலாத வகையிலும் இருப்பதால், அவற்றை பகிர்வோர் கண்டனங்களுக்கும் ஆளாகி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web