பகீர்.. இஸ்ரேல் மூதாட்டியை கொன்ற வீடியோவை பேஸ்புக்கில் பதிவேற்றிய ஹமாஸ் வீரர்..!

 
இஸ்ரேல் மூதாட்டி

இஸ்ரேலிய மூதாட்டி ஒருவரை ஹமாஸ் வீரர் சுட்டுக் கொன்றதோடு அந்த வீடியோவை மூதாட்டியின் பேஸ்புக் பக்கத்திலேயே பதிவேற்றியது உறவினர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான மோதல் கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கிய நிலையில், ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் அத்துமீறி நுழைந்து நூற்றுக்கணக்கானோரை சுட்டுக் கொன்றதோடு 230 பேர் வரை பிணைக் கைதிகளாக பிடித்து சென்றனர்.இந்த அத்துமீறிய தாக்குதலின் போது பிராச்சா லெவின்சன்(Bracha Levinson) என்ற இஸ்ரேலிய மூதாட்டி ஒருவரை ஹமாஸ் வீரர் துப்பாக்கியால்  சுட்டுக் கொன்றதோடு அந்த வீடியோவை மூதாட்டியின் பேஸ்புக் பக்கத்திலேயே பதிவேற்றியுள்ளார்.

hamas-man-killed-israeli-woman-posted-video-on-fb:இஸ்ரேலிய மூதாட்டியை சுட்டுக் கொன்றுவிட்டு…வீடியோவை மூதாட்டியின் பேஸ்புக்கில் வெளியிட்ட ஹமாஸ் வீரர்

இந்நிலையில் பிராச்சா லெவின்சனின் பேத்திகளில் ஒருவரான Hagar Shimoni ஜப்பானுக்கு விடுமுறை கொண்டாத்திற்கு சென்றுள்ளார். அப்போது முதலில் அவரது மூதாட்டியின் கோரமான புகைப்படத்துடன் கூடிய அறிவிப்பு குறுஞ்செய்தியை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின் உள்ளே சென்று வீடியோவில் பார்த்த போது, அவருடைய பாட்டி ரத்த வெள்ளத்தில் தரையில் விழுந்து கிடப்பதும், துப்பாக்கி ஏந்திய ஒருவர் தன்னுடைய துப்பாக்கியை கையில் தூக்கி பிடித்தவாறு அரபு மொழியில் பேசுவதையும் பார்த்து பதற்றத்தின் உச்சத்திற்கு சென்றுள்ளார்.

hamas-man-killed-israeli-woman-posted-video-on-fb:இஸ்ரேலிய மூதாட்டியை சுட்டுக் கொன்றுவிட்டு…வீடியோவை மூதாட்டியின் பேஸ்புக்கில் வெளியிட்ட ஹமாஸ் வீரர்

உடனடியாக வாட்ஸ் அப்பில் உள்ள பேமிலி குரூப்பில் அங்கு என்ன நடக்கிறது என்று Hagar Shimoni கேட்டுள்ளார். மேலும் தன்னுடைய சகோதரிக்கு தொடர்பு கொண்ட பேசிய போது, அவரது சகோதரி “நம்முடைய பாட்டியை எவ்வாறு அவர்கள் கொலை செய்தார்கள் என்று பார்த்தாயா?” என்று கேட்டு கதறி அழுதுள்ளார். 

From around the web