பகீர்.. நடுரோட்டில் ஓட ஓட மனைவியை வெட்டிக் கொன்ற கொடூர கணவன்..!

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறாம்பண்ணை சர்ச் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவருக்கு மீனா என்ற பெண்ணுடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில் மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக ராஜ்குமாருக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று காலை பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு மீனா வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது வீட்டிற்கு வந்த ராம்குமாருக்கும் மீனாவுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ராம்குமார், மீனாவை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். இதனால் பயந்துப்போன மீனா, வீட்டை விட்டு வெளியே ஓடியுள்ளார். இருப்பினும் அவரை பின்தொடர்ந்து சென்ற ராம்குமார், மீனாவை கழுத்தில் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மீனா ரத்த வெள்ளத்தில் சரித்துள்ளார். பின்னர் அவரை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் மீனா சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து ராம்குமார் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மீனாவின் உடலை மீட்டு பிரேத பரிசொதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலைக்கு குடும்ப தகராறு தான் காரணமா அல்லது வேறு ஏதும் காரணமா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பியோடிய ராம்குமாரை வலை வீசி தேடி வருகின்றனர்.