பகீர்.. வங்கியில் கத்தியை காட்டி மிரட்டி நான்கரை லட்சம் கொள்ளை..!!

 
கத்தியை காட்டி மிரட்டி கொள்ளை

கத்தியை காட்டி மிரட்டி வங்கியில் இருந்த நான்கரை லட்சம் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், நரசபுரம் நகர், ஜோசியக்காரர் வீதியில் ஸ்டேட் பேங்க் கிளை இயங்கி வருகிறது. கடந்த 1ம் தேதி முகத்தில் மாஸ்க் அணிந்து பெரிய பை ஒன்றை எடுத்து வந்த  ஒருவர் நேராக வங்கியின் கேஷியர் அறைக்கு சென்றுள்ளார். டெபாசிட் செய்ய பெரிய தொகையுடன் வந்திருப்பதாக நினைத்த பெண் கேசியர் அவரை வரவேற்று, நாற்காலி கொடுத்து உட்கார வைத்துள்ளார். கேசியர் அருகே உட்கார்ந்த அவர், சட்டைக்குள் புழு புகுந்துவிட்டது போல அங்கும் இங்கும் நெளிந்து இருக்கிறார்.

Narasapuram, West Godavari : నరసాపురం: ఉద్యోగం పేరుతో ఘరానా మోసం.. రూ.27  లక్షలు పోగొట్టుకున్న యువకుడు | Public App

வித்தியாசமாக நடந்துகொண்ட அவர் திடீரென்று நாற்காலியில் இருந்து எழுந்துள்ளார்.  பணத்தை மொத்தமாக எடுக்கிறார் என நினைத்து கேஷியர் பார்த்துகொண்டிருக்க, பையை திறந்து அதிலிருந்த பெரிய கத்தியை எடுத்தார்  அந்த மர்ம நபர். அதிர்ந்துபோன கேஷியர் அச்சத்தில் அலற, அவரை கத்தியை காட்டி மிரட்டி டேபிள் மீது வைக்கப்பட்டிருந்த நான்கரை லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே ஓடினார் மாஸ்க் நபர். வங்கி ஊழியர்கள் விரட்டியும் அவர்கள் கையில் சிக்காமல் திருடிய பணத்தோடு தப்பி ஓடினார்.

கத்தியை காட்டி மிரட்டி வங்கியில் கொள்ளை.. ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்..

ஓடும்போது பணக்கட்டுகளில் ஒன்று பையில் இருந்து சிதறி விழ, அதை கண்டுகொள்ளாமல் திருடன் அங்கிருந்து தப்பித்துள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பாக வங்கி ஊழியர்கள் அளித்த புகாரின்பேரில், நரசாபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிசிடிவியில் பதிவாகி இருந்த திருடனின் அடையாளத்தை, மாவட்டம் முழுக்க அனுப்பி தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். பட்டப்பகலில் வங்கியில் பணதிருட்டு நடந்தேறிய சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web