பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு 30 பேர் பரிதாப பலி!

 
pakisthan pakisthan

ஜம்மு காஷ்மீரின் 35 சதவீத பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளது. இந்தப் பகுதியில் நிலவி வரும் மனித உரிமை மீறல்கள், கடுமையான விலைவாசி உயர்வு மற்றும் அரசியல் உரிமைகள் பறிப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகளை கண்டித்து அவாமி நடவடிக்கை குழு என்ற மனித உரிமைகள் அமைப்பு அவ்வப்போது பல போராட்டங்களை நடத்தி வந்தது.

இதன் தொடர்ச்சியாக மின்சாரம் மற்றும் உணவுப் பொருட்களில் மானியம் வழங்க வேண்டும் என்பது உட்பட 38 கோரிக்கைகளை முன்வைத்து அந்த அமைப்பினர் புதிய போராட்டம் ஒன்றை நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து ஆக்கிரமிப்பு காஷ்மீர் அரசுக்கு எதிராக தங்களின் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீரென போராட்டக்காரர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த கொடூர சம்பவத்தில் 30 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததால் அந்தப் பகுதி முழுவதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது