இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் வான்வழித் தடை நீட்டிப்பு !
இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வழியைப் பயன்படுத்துவதற்கான தடையை அந்நாட்டு அரசு மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்துள்ளது. இதன்படி, நவம்பர் 24-ம் தேதி அதிகாலை வரை தடை அமலில் இருக்கும் என்று பாகிஸ்தான் விமான நிலையங்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தத் தடை இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட விமானங்கள் மட்டுமின்றி, இந்திய விமான நிறுவனங்களுக்குச் சொந்தமான, அவற்றால் இயக்கப்படும் அல்லது குத்தகைக்கு எடுக்கப்பட்ட விமானங்களுக்கும் பொருந்தும். ராணுவ விமானங்களுக்கும் இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கராச்சி, லாகூர் ஆகிய இரு வான்வழிப் போக்குவரத்துப் பகுதிகளிலும் தடை அமலில் இருக்கும்.
இந்தியா–பாகிஸ்தான் இடையிலான பதற்றமான உறவுகளுக்கு மத்தியில், கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தத் தடை முதன்முதலில் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் வான்வழியைத் தவிர்த்து மாற்றுப் பாதைகளில் செல்ல வேண்டியிருப்பதால், இந்திய விமான நிறுவனங்களுக்கு பயண நேரமும் எரிபொருள் செலவும் அதிகரிக்கின்றன.
