பாகிஸ்தானில் பேருந்து விபத்து: பெண்கள், குழந்தைகள் உள்பட 11 பேர் பலி!
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பேருந்து ஒன்று சாலைப் பிரிப்பானில் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கராச்சியில் இருந்து தேரா காசி கான் மாவட்டத்துக்குச் சென்றுகொண்டிருந்த பேருந்து, லாகூரில் இருந்து சுமார் 500 கி.மீ. தொலைவில் உள்ள ராஜன்பூர் அருகே சென்றபோது விபத்தில் சிக்கியது. அந்தப் பகுதியில் நெடுஞ்சாலை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து வேகமாகச் சென்றதே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர். காயமடைந்தவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பஞ்சாப் மாகாண முதல்-மந்திரி மரியம் நவாஸ் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்
