பாகிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்! 3.6, 4.2 ரிக்டர் என அதிர்வுகள் பதிவு!

 
நிலநடுக்கம்

 

பாகிஸ்தானில் இன்று (அக். 26) ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் நில அதிர்வுகள் குறித்த தகவல்கள் கவனம் பெற்றுள்ளன.

நிலநடுக்கம் கூகுள்

இந்திய நேரப்படி காலை 6.06 மணிக்கு 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. தொடர்ந்து காலை 11.15 மணிக்கு 4.2 ரிக்டர் அளவில் மற்றொரு நில அதிர்வு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

நிலநடுக்கம்

முதல் நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 15 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக இந்திய தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இரண்டாவது நிலநடுக்கத்தின் விவரங்கள் மற்றும் சேதங்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை.