பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய விமானங்களுக்கான தடை நீட்டிப்பு!

 
ஏர் இந்தியா விமானம்

இந்தியாவின் பயணிகள் மற்றும் ராணுவ விமானங்கள் தங்களது வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

காஷ்மீரில் நிகழ்ந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே தூதரக மற்றும் ராணுவ ரீதியிலான பதற்றம் அதிகரித்தது. இதன் காரணமாகப் பாகிஸ்தான் அரசு கடந்த 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் இந்திய விமானங்கள் தங்களது வான்பரப்பில் பறக்க முதன்முதலில் தடை விதித்தது. இருநாடுகளுக்கும் இடையே எல்லைப் பகுதிகளில் ராணுவப் பதற்றம் ஓரளவுக்குத் தணிந்திருந்த போதிலும், தூதரக உறவுகள் இன்னும் சீரடையாத சூழல் நிலவுகிறது.

இதன் காரணமாக, குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்த வான்வெளித் தடையை மீண்டும் நீட்டித்து பாகிஸ்தான் வான்வழி ஆணையம் புதிய நோட்டம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய உத்தரவின்படி, இந்திய விமானங்கள் மீதான தடை வரும் நவம்பர் 24-ஆம் தேதி வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.