ஆற்றில் பாய்ந்த பயணிகள் வேன்… குழந்தை உட்பட 11 பேர் உயிரிழப்பு!

 
van

 

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் பயணிகள் வேன் ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் குழந்தை உட்பட 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 At least 11 passengers killed after van plunges into Pakistan river | The Independent

கில்கிட்டில் இருந்து கிசர் மாவட்டத்தில் உள்ள யாசின் பள்ளத்தாக்கு நோக்கி நேற்று (வியாழக்கிழமை) மாலை பயணிகள் வேன் சென்று கொண்டிருந்தது. மோர்கா பாலம் அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், யாசின் ஆற்றில் கவிழ்ந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர் இரண்டு பெண்கள் உட்பட 10 பேரின் உடல்களை மீட்டனர். மேலும், ஒரு குழந்தை உட்பட 3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு குபிஸ் சிவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

 11 Killed as Passenger Van Plunges Into River in PoK - Kashmir Observer

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. உயிரிழந்தவர்களும் காயமடைந்தவர்களும் யாசின் பள்ளத்தாக்கைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.