இம்ரான் கான் ஆதரவாளர்களின் பேரணி - இஸ்லாமாபாத் எல்லைகளை மூடியது பாகிஸ்தான் அரசு!
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானைச் சிறையிலிருந்து விடுதலை செய்ய வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் பேரணி நடத்த உள்ளதை தொடர்ந்து, தலைநகர் இஸ்லாமாபாத்தின் எல்லைகள் அனைத்தையும் அந்நாட்டு அரசு அதிரடியாக மூடியுள்ளது.

ஊழல் வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானை விடுதலை செய்யக் கோரி, அவரது கட்சித் தொண்டர்கள் இஸ்லாமாபாத்தை நோக்கிப் பேரணியாகச் செல்லத் திட்டமிட்டுள்ளனர். இதைக் கட்டுப்படுத்தவும் தடுத்து நிறுத்தவும் பிரம்மாண்டமான கன்டெய்னர்களைக் கொண்டு நகரின் எல்லைகளைப் பாதுகாப்புப் படையினர் முழுமையாக அடைத்துள்ளனர்.
அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால் கராச்சி துறைமுகத்தின் சரக்கு வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிருப்தி அடைந்துள்ள லாரி உரிமையாளர்கள், நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
