பயங்கர விபத்தில் சிக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீராங்கனைகள்.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!
பாகிஸ்தான் மகளிர் அணியின் கிரிக்கெட் வீரர்கள் பிஸ்மா மரூப் மற்றும் குலாம் பாத்திமா ஆகியோர் கார் விபத்தில் காயமடைந்தனர். பாகிஸ்தான் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 18ம் தேதி துவங்குகிறது. இந்த தொடருக்காக பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் வீரர்கள் கராச்சியில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
A setback for Pakistan as two key players sustain injuries following a minor car accident 👇https://t.co/MuPdocIEU7
— ICC (@ICC) April 6, 2024
இதற்கிடையில், இந்த அணியில் இடம்பெற்றிருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பிஸ்மா மரூப் மற்றும் குலாம் பாத்திமா ஆகியோர் கார் விபத்தில் சிக்கி காயமடைந்தனர். இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், "எங்கள் அணியின் வீரர்கள் பிஸ்மா மரூப், குலாம் பாத்திமா ஆகியோர் நேற்று மாலை கார் விபத்தில் சிக்கியுள்ளனர்.

ஆனால், அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இருவரும் அணியின் மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் உள்ளனர். அவர்கள் எடுக்கும் முடிவைப் பொறுத்து மருத்துவ அணி, இருவரும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக விளையாடுவார்களா, தொடரில் பங்கேற்பார்களா என்பது தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!
