77 பாட்டில்களை தலையால் திறந்து கின்னஸ் சாதனை படைத்த பாகிஸ்தான் வாலிபர்! வைரல் வீடியோ!

 
மூடி

பாகிஸ்தானை சேர்ந்த நபர் தலையால் 77 பாட்டில் மூடிகளை நீக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பொதுவாக கின்னஸ் சாதனை என்றாலே பலருக்கும் ‘அப்படியா’, ‘இது எவ்வாறு சாத்தியம்’, ‘என்னால் நம்பவே முடியவில்லை’ என்று புருவம் உயர தங்களின் வியப்பை வெளிப்படுத்துவார்கள். பலர் கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்பதையே தங்கள் வாழ்வின் லட்சியமாக எண்ணி ஓடிக்கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் எப்படியாவது மக்களிடையே தாம் பிரபலமாக வேண்டும், வைரலாக வேண்டும் என்பதற்காகவே எதாவது ஒன்றில் கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்று, கிறுக்குத்தனம் என எண்ணவைக்கும் சில செயல்களைச் செய்துகொண்டிருப்பர்.

மூடி

இந்நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த, முகமது ரஷீத் என்பவர் புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். இதன்படி, மேஜை ஒன்றின் முனை பகுதியில் பாட்டில்களை இறுக பிடித்து கொண்டு திறமையாக, அதன் மூடிகளை அவருடைய தலையால் விரைவாக முட்டி, நீக்குகிறார்.

பாட்டில்களை ஒன்றன் பின் ஒன்றாக அவருடைய உதவியாளர்கள் அனுப்பி கொண்டே இருக்கின்றனர்.  அதிவேகத்தில் இந்த பாட்டிலின் மூடிகளை நீக்கும் செயலை தலையால் செய்து ரஷீத் சாதனை படைத்திருக்கிறார். அவர் மொத்தம் 77 பாட்டில் மூடிகளை ஒரு நிமிடத்தில் நீக்கியுள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரியில் இந்த சாதனையை அவர் படைத்திருக்கிறார்.

From around the web