சீனர்களை குறிவைக்கும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள்.. விவரம் என்ன தெரியுமா?

 
பாகிஸ்தான் தாக்குதல்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள தாசுவில் உள்ள முகாமுக்கு சீன பொறியாளர்கள் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. ஆயுதங்கள் ஏற்றிய வாகனத்தில் வந்த பயங்கரவாதி ஒருவர், பொறியாளர்கள் சென்ற வாகனத்தை வேகமாக தாக்கி வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார்.

இந்த தற்கொலைப்படை தாக்குதலில் சீன பொறியாளர்கள் 5 பேரும், பாகிஸ்தானை சேர்ந்த டிரைவர் ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த குண்டுவெடிப்புக்கு சீன அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுடன் நட்பாக இருக்கும் சீனா, அங்கு மேற்கொள்ளப்படும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக தனது பொறியாளர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி வருகிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் சீன நிறுவனங்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ளன. கடந்த 2021ஆம் ஆண்டு இதே பகுதியில் பேருந்து மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் சீனாவைச் சேர்ந்த 9 பேர் உள்பட 13 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web