வகுப்பறைக்குள் நாட்டுத் துப்பாக்கியால் சுட்ட சக மாணவன்: 9ம் வகுப்பு மாணவன் படுகாயம்!
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் திரித்தாலா பகுதியில் உள்ள பருரூர் மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு மாணவன், சக மாணவனை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் படுகாயமடைந்துள்ளார். கொடுமுண்டாவைச் சேர்ந்த மாணவன் தனது பையில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட நாட்டுத் துப்பாக்கியை மறைத்து எடுத்து வந்துள்ளார்.
வகுப்பறையில் இருந்தபோது அவர் திடீரெனச் சுட்டதில் முதல் குண்டு தரையில் பாய்ந்துள்ளது. அடுத்த குண்டு அஞ்சுமூலாவைச் சேர்ந்த சக மாணவனின் கையில் பாய்ந்ததில் அவர் ரத்த வெள்ளத்தில் துடித்துள்ளார்.

சத்தம் கேட்டு மாணவர்கள் அலறியடித்து வெளியே ஓடிய நிலையில், காயமடைந்த மாணவனை ஆசிரியர்கள் மீட்டு கோட்டக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அறுவை சிகிச்சை மூலம் குண்டை அகற்றத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்தத் துப்பாக்கி மாணவனுக்கு எப்படி கிடைத்தது மற்றும் பெற்றோரின் கவனக்குறைவு ஏதேனும் உள்ளதா என்பது குறித்துத் திரித்தாலா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
