பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை திடீர் நிறுத்தம்! பக்தர்கள் கவனத்திற்கு
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரோப்கார் சேவை இன்று (அக். 20) தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மலைக்கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகின்றனர்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவிலுக்குச் செல்ல படிப்பாதை, யானைப்பாதை, மின்இழுவை ரெயில் மற்றும் ரோப்கார் ஆகிய வசதிகள் உள்ளன. இதில் ரோப்கார் மூலம் சுமார் 3 நிமிடங்களில் மலைக்கோவிலை அடையலாம்.

இந்நிலையில், இன்று காலை சுமார் 11 மணியளவில் ரோப்காரின் கியர்பாக்ஸ் ஷாப்டில் பழுது ஏற்பட்டதால் சேவை நிறுத்தப்பட்டது. பழுதைச் சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. பணிகள் முடிந்ததும் ரோப்கார் சேவை மீண்டும் தொடங்கப்படும். அதுவரை பக்தர்கள் மின்இழுவை ரெயில் மற்றும் படிப்பாதையைப் பயன்படுத்தி மலைக்கோவிலுக்குச் செல்லலாம்
