நவம்பர் 5 வரை பழனி ரோப் கார் ஆன்லைன் முன்பதிவு நிறுத்தம்!

 
பழனி கோயிலில்  ரோப் கார் சேவைகள் ரத்து!

 

திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவைக்கான ஆன்லைன் முன்பதிவு நவம்பர் 5-ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மலைக்கோவில்களில் ரோப் கார்!! தமிழக அரசு அதிரடி!!

கடந்த 20-ம் தேதி ரோப் காரின் கியர் பாக்ஸ் ஷாப்ட்டில் பழுது ஏற்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பழுதடைந்த உதிரிபாகத்தைச் சீரமைப்பதற்காக கோவையில் உள்ள நிறுவனத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

ரோப் கார்

பழுதுநீக்கும் பணிகள் முடிந்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட பின்னரே ரோப் கார் சேவை மீண்டும் தொடங்கப்படும். அதுவரை மலைக்கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் படிப்பாதை, யானைப்பாதை மற்றும் மின்இழுவை ரெயில் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.