பகீர் !! ஊராட்சி மன்ற உறுப்பினர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை!!

 
ராஜாமணி

திருநெல்வேலி மாவட்டம் கீழநத்தம் வடக்கூரில் வசித்து வருபவர் ராஜாமணி. இவருக்கு வயது 33. இவர் ஊராட்சி மன்ற உறுப்பினராக பதவி வகித்து  வந்தார். இந்நிலையில் நேற்று ராஜாமணி வழக்கம் போல தனது ஆடுகளை  மேய்த்து விட்டு,  மாலையில்   வீட்டுக்கு   திரும்பிக்  கொண்டிருந்தார்.அந்த சமயத்தில்   அவரை திடீரென ஒரு கும்பல் வழிமறித்து   வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக அவரை வெட்டத் தொடங்கியது.

ராஜாமணி

அவர்களைப் பார்த்ததும் ராஜாமணி அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தார். மர்ம கும்பல்  அவரை ஓட ஓட விரட்டி  வெட்டி சாய்த்து விட்டு  தப்பி ஓடிவிட்டது.  அவரது அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக வந்தவர்கள்  ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த ராஜாமணியை அங்கிருந்தவர்கள் மீட்டு திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி ராஜாமணி உயிரிழந்தார்.

போலீஸ்
ராஜாமணி  உயிரிழந்து விட்டார் என்ற தகவல் கிடைத்ததும் அவரது  ஆதரவாளர்கள்  மருத்துவமனையின் முன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என காவல்துறையிடம் வலியுறுத்தினர். போலீசார் அவர்களிடம் உறுதி அளித்ததும் அந்த இடத்தை விட்டு அகன்றனர். இருந்தபோதிலும்  முன்னெச்சரிக்கையாக நடவடிக்கையாக ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். அத்துடன் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு “ ராஜாமணி  கொலை செய்யப்பட்டது, முன்விரோதம்  காரணமாகவா? அல்லது  வேறு என்ன  காரணம்? ”  என தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  அவரை வெட்டி சாய்த்து தலைமறைவாக திரியும் மர்மகும்பலை பிடிக்க தனிப்படை  அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!