ஊராட்சி மன்ற தலைவர் மயங்கி சரிந்து உயிரிழப்பு!! சுதந்திர நாளில் சோகம்!!

 
பழனி

நேற்று ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியா முழுவதும் 77வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்படது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ஒன்றியம், புதுப்பாளையத்திலும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. புதுப்பாளையத்தின் ஊராட்சி தலைவர்  பழனி  நேற்று காலை, ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவிலும் கலந்து கொண்டு   தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

திருப்பூர்

அதை தொடர்ந்து,  கிராமசபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக, காலை, 11 மணி அளவில் புறப்பட்ட போது, திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி சரிந்து விழுந்து உயிரிழந்தார். 
கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்ள இருந்த நிலையில் அவர் மரணமடைந்தது  அந்த பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

140 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட தேசியக்கொடி!

கிராமமே திரண்டு வந்து அவருக்கு  இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு அதன்பின்னர் துணைத் தலைவர் தலைமையில் கிராமசபை கூட்டத்தை நடத்தியது. சுதந்திர தின நாளில் தேசியக்கொடி ஏற்றிவிட்டு  ஊராட்சி தலைவரின் திடீர் உயிரிழப்பு, கிராம மக்களை பெரும்சோகத்திலும், அதிர்ச்சியிலும்  ஆழ்த்தியுள்ளது

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web