பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு எதிராக 9 முறை தீர்மானம் நிறைவேற்றிய ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தூக்கிட்டு தற்கொலை... கதறித் துடிக்கும் கிராமத்தினர்!

 
திவ்யா

 தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அங்கிருக்கும் விவசாயிகள் தங்களது நிலத்தை கொடுக்க மறுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பரந்தூர் சுற்று வட்டார  அனைத்து கிராம மக்களும் துயரமாக இருந்து வரும்  வேளையில் ஏகனாபுரம் கிராமத்தின் துணைத் தலைவர்  நிர்வாகி ஸ்ரீகணபதி மனைவி திவ்யா மன உளைச்சலால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பரந்தூர்

பரந்தூர் விமான நிலையத்  திட்டத்தை எதிர்த்து போராடும் நிர்வாகி ஸ்ரீ கணபதி அரசாங்கத்திற்கு எதிராக 9 முறை தீர்மானம் நிறைவேற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு 2 மகன் , ஒரு மகள் உள்ளனர்.  பரந்தூர் விமான நிலைய திட்டத்தால் தங்களது நிலங்கள் பறி போகப்போகுதே என்ற கவலையில் 32 வயது பெண் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தற்கொலை செய்துகொண்ட‌து சுற்று வட்டாரங்களில் பெரும்  பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஏகனாபுரம் ஊராட்சி மன்ற துணை தலைவரான திவ்யா கணபதி, பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவின் முக்கிய நிர்வாகியாகவும் இருந்து வந்தார்.  

தற்கொலை

திவ்யா கணபதி, வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தகவலறிந்து சென்ற போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web