பங்குனி மாத பலன்கள்: மீனம் ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்... இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை.. யோகமான காலம்!
2026-ம் ஆண்டு பங்குனி மாதம் (மார்ச் 15 முதல் ஏப்ரல் 13 வரை) நவகிரகங்களின் சஞ்சாரத்தின்படி முக்கிய மாற்றங்களை உள்ளடக்கியதாக உள்ளது. சூரியன் மீன ராசியில் சஞ்சரிக்கும் இந்த மாதத்தில், 12 ராசிகளுக்குமான விரிவான பலன்களைப் பார்க்கலாம். பங்குனி மாதத்தில் முக்கிய ஆன்மிக விழாக்களாக பங்குனி உத்திரம் மற்றும் காரடையான் நோன்பு வருகிறது. முருகப் பெருமானையும், சிவபெருமானையும், தெய்வத் திருமணங்களையும் வழிபட உகந்த நாளாக பங்குனி உத்திரம் அமைந்திருக்கிறது. மாங்கல்ய பலம் பெறப் பெண்கள் கடைபிடிக்கும் விரதமாக காரடையான் நோன்பு தினத்தைத் தவற விடாதீங்க.
பங்குனி மாதத்தில் சிவபெருமான் மற்றும் மகாவிஷ்ணுவை வழிபடுவது அனைத்து ராசிகளுக்கும் சகல நன்மைகளையும் வழங்கும்
மேஷம்:
மாதத் தொடக்கத்தில் அலைச்சல்கள் இருந்தாலும், பிற்பகுதியில் நன்மைகள் பெருகும். பணப்புழக்கம் சீராக இருக்கும். சுப காரியங்களுக்காகச் செலவு செய்ய நேரிடும். ஆன்மீகப் பயணங்கள் மன அமைதியைத் தரும்.
ரிஷபம்:
பங்குனி மாதம் உங்களுக்கு ஒரு பொற்காலமாக அமையும். லாப ஸ்தானம் வலுவாக இருப்பதால் தொட்டதெல்லாம் துலங்கும். நிலுவையில் இருந்த தொகைகள் கைக்கு வரும். வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
மிதுனம்:
தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய மாற்றங்களைச் செய்வீர்கள். கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆரோக்கியத்தில் மட்டும் சிறு கவனம் தேவை.

கடகம்:
பாக்கிய ஸ்தானம் சிறப்பாக இருப்பதால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். தந்தையின் ஆதரவு கிட்டும். உயர்கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்குச் சாதகமான சூழல் நிலவும். வெளிநாட்டுத் தொடர்புகள் லாபம் தரும்.
சிம்மம்:
எட்டாம் இடத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானமும், வாகனப் பயணங்களில் எச்சரிக்கையும் தேவை. தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். மாதத்தின் இரண்டாம் பாதியில் சிக்கல்கள் படிப்படியாகக் குறையும்.
கன்னி:
ஏழாம் இடத்தில் கிரகங்களின் சேர்க்கை இருப்பதால் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும். கணவன் - மனைவி இடையே புரிதல் கூடும். திருமண முயற்சிகள் கைகூடும் நேரமிது.
துலாம்:
எதிர்ப்புகள் நீங்கி வெற்றி பெறும் மாதமிது. கடன் சுமைகள் குறைய வழிகள் பிறக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். தாய் வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும்.
விருச்சிகம்:
பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் உண்டாகும். பூர்வீகச் சொத்து விவகாரங்களில் சாதகமான முடிவுகள் வரும். கலைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகள் கதவைத் தட்டும். தெய்வ வழிபாட்டில் ஆர்வம் கூடும்.

தனுசு:
வீடு, வாகன மாற்றங்கள் செய்ய நினைப்பவர்களுக்கு இது ஏற்ற காலம். தாயாரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வசதி வாய்ப்புகள் பெருகும். உறவினர்களுடன் விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள்.
மகரம்:
தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இளைய சகோதரர்களின் உதவி கிடைக்கும். குறுகிய தூரப் பயணங்களால் ஆதாயம் உண்டு. உங்கள் கருத்துக்களுக்குச் சமூகத்தில் மதிப்பு கூடும்.
கும்பம்:
தன ஸ்தானம் சிறப்பாக இருப்பதால் பொருளாதார நிலையில் பெரிய முன்னேற்றம் இருக்கும். பேச்சாற்றலால் காரியங்களைச் சாதிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சேமிப்பு உயரும்.
மீனம்:
ராசியிலேயே சூரியன் சஞ்சரிப்பதால் உடல் உஷ்ணம் சார்ந்த உபாதைகள் வரலாம். முக்கிய முடிவுகளை எடுக்கும்போது நிதானமாகச் செயல்படவும். மற்றபடி சமூகத்தில் அந்தஸ்து உயரும் மாதமாக இது இருக்கும்.
