கொல்கத்தா விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு.. CISF வீரர் தூக்கிட்டு தற்கொலை!

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா நகரில் உள்ள கொல்கத்தா விமான நிலையத்தில் இன்று காலை 10.40 மணியளவில் சர்வதேச சரக்கு பிரிவில் வீரர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) வீரர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் கிடைத்ததும், விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இருப்பினும், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இறந்தவர் ஒரு CISF கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்துள்ளார். அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்த விவரங்கள் அல்லது அடையாளம் எதுவும் வெளியிடப்படவில்லை. அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து விசாரித்து வருகின்றனர். இதனால் கொல்கத்தா விமான நிலையத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!