பதறும் மக்கள்... தமிழ்நாட்டில் கோபி மஞ்சூரியனுக்கு தடை!?

 
பதறும் மக்கள்... தமிழ்நாட்டில் கோபி மஞ்சூரியனுக்கு தடை!? 

கர்நாடகாவில் கோபி மஞ்சூரியன் தடை செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஹோட்டல்களிலும், பாஸ்ட் புட் கடைகளிலும் ரோடமைன்-பி ரசாயனம் குறித்து ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் சைவ உணவு உண்பவர்கள் ரசித்து உண்ணும் விருப்ப உணவாக சிக்கனுக்கு பதிலாக கோபி மஞ்சூரியன் இருந்து வருகிறது. வேக வைத்த காலிஃபிளவரை கனகச்சிதமான துண்டுகளாக்கி, சோளமாவு மற்றும் அரிசிமாவு கலந்து, எண்ணெயில் மொறுமொறுவென வறுத்து, சிக்கன் 65 போலவே, சாஸ் வைத்து பரிமாறப்படும் கோபி மஞ்சூரியன் தள்ளுவண்டி கடைகள் துவங்கி ஸ்டார் ஹோட்டல்கள் வரையில் பிரபலமான ஸ்டார்ட்டர் வகை உணவாக இருந்து வருகிறது. 

பதறும் மக்கள்... தமிழ்நாட்டில் கோபி மஞ்சூரியனுக்கு தடை!? 

இந்நிலையில், கோபி மஞ்சூரினின் சுவைக்காக அதில் சேர்க்கப்படும் மசாலாக்களும், நிறமிகளும் புற்றுநோயை உருவாக்கும் வகையில் ஆபத்தானவை என புகார்கள் எழுந்தன. இதுதொடர்பான ஆய்வில், சோப்புக்கொட்டை பொடி, தரமற்ற சாஸ் வகைகள், நிறமிக்காக ரோடமைன்-பி ரசாயனம் ஆகியவைப் பயன்படுத்தப்படுவதாக தெரிய வந்ததையடுத்து, கர்நாடகாவிலும் கோபி மஞ்சூரியனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ரோடமைன்-பி ரசாயணம் பயன்படுத்தப்படுவதால் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு கோபி மஞ்சூரியனுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று குரல்கள் ஒலிக்க துவங்கியுள்ளன. இப்படி ஒவ்வொரு உணவு வகைகளாக உயிருக்கே உலை வைக்கும் ரசாயணங்களைக் கலந்து விற்பனை செய்வதை அரசு கட்டுப்படுத்த வேண்டும். அண்டை மாநிலங்களைப் போல மக்கள் மீது தமிழக அரசும் அக்கறை செலுத்த வேண்டும். உயிரிழப்புகள் நேரிட்ட பின்னர், நிதியுதவி வழங்குவதோ... அதன் பின்னர் தடை விதிப்பதோ தீர்வல்ல என்றும் குரல்கள் ஒலிக்கின்றன.

பதறும் மக்கள்... தமிழ்நாட்டில் கோபி மஞ்சூரியனுக்கு தடை!? 

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் 4,000 பேருக்குப் புற்றுநோய் பாதிப்புகள் என்று சுகாதாரத்துறை அமைச்சர் புள்ளி விவரங்களைச் சொல்லி அதிர வைக்கிறார். ஆனாலும், அதற்கெல்லாம் வெறும் தொழிற்சாலைகளில் கழிவு நீர் மட்டுமா காரணம்? உணவகங்களில் ஆய்வு மேற்கொள்வதை அடிக்கடி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். புற்றுநோயை உருவாக்கும் ரசாயணங்கள் கலக்கப்படுவது உறுதியானால், தமிழகத்திலும் கோபி மஞ்சூரியன், சிக்கன் 65, பிங்கர் பிஷ் போன்றவைகளுக்கு தடை விதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

From around the web