பதறும் மக்கள்... கதறிய சொந்தங்கள்... கொலை நகரமாக மாறுகிறதா தமிழகம்? தீபாவளியன்று ஒரே நாளில் 11 கொலைகள்!

 
8

தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்களுக்கு இடையே, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒரே நாளில் நடந்த கொலைச் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சிறுவர்கள், இளைஞர்கள், பெண் மற்றும் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் உட்பட 11 பேர் கொல்லப்பட்டதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் பதற வைக்கின்றன. தமிழகம் கொலைக்களமாக மாறி வருகிறதோ என்று பதைபதைக்க செய்கிறது.

தீபாவளி நாளில் தமிழகத்தில் 11 கொலைகள்

கடந்த நவம்பர் 8-ம் தேதி தீபாவளியன்று திருச்சி, சென்னை, தேனி, கடலூர், சிவகங்கை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

திருச்சி சமயபுரம் பகுதியில் 17 வயதுடைய ராகுல், விஷால் ஆகிய இரு சிறுவர்கள் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டனர். புறத்தாக்குடியில் பட்டாசு வெடிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 20 வயது ஐ.டி. ஊழியர் கிறிஸ்டோபர் கொலை செய்யப்பட்டார்.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

தேனி மாவட்டத்தில் சாலையை மறித்து பட்டாசு வெடித்து ரீல்ஸ் வீடியோ எடுத்தவர்களைத் தட்டிக்கேட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.

சென்னை வியாசர்பாடியில் தனுஷ் என்ற இளைஞர் முன்விரோதம் காரணமாகக் கொல்லப்பட்டார். கடலூர், சிவகங்கை, திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களிலும் கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மதுபோதையில் ஏற்பட்ட தகராறுகள், முன்விரோதம் மற்றும் பட்டாசு வெடிப்பது தொடர்பான வாக்குவாதங்கள் உள்ளிட்ட வெவ்வேறு காரணங்களால் இந்தச் சம்பவங்கள் நிகழ்ந்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல வழக்குகளில் குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன