பாராலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.5 கோடி ஊக்கத் தொகை... முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!
இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று வெள்ளி, வெண்கல பதக்கங்கள் பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.5 கோடிக்கான காசோலைகளை வழங்கி வாழ்த்தியதுடன், நெசவாளர்களுக்கான விருதுகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில், பிரான்ஸ் நாட்டின் பாரீசில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியிகளில் வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் வென்ற விளையாட்டு வீராங்கனைகள் துளசிமதி, நித்யஸ்ரீ, மனிஷா மற்றும் விளையாட்டு வீரர் மாரியப்பன் ஆகியோருக்கு உயரிய ஊக்கத் தொகையாக மொத்தம் ரூ.5 கோடிக்கான காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார்.
இதையடுத்து, கடந்த 2023-24-ம் ஆண்டுக்கான பட்டு மற்றும் பருத்தி ரகங்களில் சிறந்த கைத்தறி நெசவாளர் விருதுக்கு தேர்வான 6 விருதாளர்களுக்கு பரிசுத் தொகையாக ரூ,20 லட்சத்துக்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் முதல்வர் வழங்கினார். சிறந்த வடிவமைப்பாளர் விருதுக்கு தேர்வானவர்களுக்கு ரூ.40 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் சான்றிதழ்களையும், போட்டித் தேர்வு மூலம் சிறந்த வடிவமைப்பாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட வடிவமைப்பாளர்களுக்கு பரிசுத் தொகையாக ரூ.2.25 லட்சத்துக்கான பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!