பல பெண்களுடன் தொடர்பு - பரமக்குடி டி.எஸ்.பி. ஜாபர் சித்திக் சஸ்பெண்ட்!
பல பெண்களுடன் தகாத தொடர்பு வைத்துக்கொண்டு தன்னைத் துன்புறுத்துவதாக மனைவி அளித்த புகாரின் பேரில், பரமக்குடி துணைப் போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பரமக்குடி டி.எஸ்.பி-யாகப் பணியாற்றி வந்த ஜாபர் சித்திக், பல பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு தன்னைத் தொடர்ந்து மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் துன்புறுத்தி வருவதாக அவரது மனைவி உயர் அதிகாரிகளிடம் பரபரப்பு புகார் அளித்தார். காவல் துறை உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில், இந்த தீவிரக் குற்றச்சாட்டு குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டது.
மனைவியின் புகாரில் உள்ள குற்றச்சாட்டுகள் குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், டி.எஸ்.பி. ஜாபர் சித்திக்கை பணியிடை நீக்கம் செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க வேண்டிய உயர் காவல் அதிகாரியே, சொந்த மனைவியின் புகாரின் பேரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் காவல்துறை வட்டாரத்திலும் அப்பகுதியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
