ரீல்ஸ் மோகத்தால் ஆபத்து? குழந்தையை கடலுக்குள் இழுத்துச் சென்ற அலை! அதிர்ச்சி வீடியோ!

 
கடல் அலை

 

கடற்கரையில் பெற்றோர் ரீல்ஸ் எடுப்பதில் கவனம் செலுத்தியபோது, குழந்தையைப் பெரிய அலை கடலுக்குள் இழுத்துச் சென்றதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோரின் கவனக்குறைவால் குழந்தை ஆபத்தில் சிக்கியதைப் பார்த்த அருகில் இருந்த நபர் ஒருவர் உடனடியாகச் செயல்பட்டு, குழந்தையைப் பத்திரமாக மீட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

குழந்தையைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தாமல் ரீல்ஸ் எடுப்பதில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பெற்றோருக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கடற்கரையில் குழந்தைகளுடன் செல்லும்போது, அலைகளின் வேகம் மற்றும் கடல் நீரோட்டத்தின் ஆபத்தை உணர்ந்து, குழந்தைகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் உணர்த்துகிறது.