கொடூரத்தின் உச்சம்... உடையில் சிறுநீர் கழித்த 5 வயது சிறுவனுக்குச் சூடு வைத்த ஆசிரியை... கதறும் பெற்றோர் !
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பள்ளி ஒன்றில் மனிதநேயமற்ற கொடூரச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அங்கு பயிலும் 5 வயது சிறுவன் வகுப்பறையில் கழிவறைக்குச் செல்ல ஆசிரியையிடம் அனுமதி கேட்டுள்ளான். ஆனால் ஆசிரியை அனுமதி மறுத்ததால், கட்டுப்படுத்த முடியாமல் அச்சிறுவன் எதிர்பாராதவிதமாகத் தனது உடையிலேயே சிறுநீர் கழித்துள்ளான். இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற ஆசிரியை, சிறுவனுக்குக் கடுமையான தண்டனை அளிக்கத் துணிந்துள்ளார்.
Shocking incident in Varanasi: A 5-year-old nursery student was allegedly punished in the most brutal way after wetting his pants at a play school in the Akatha area. As per the complaint, the teacher heated a knife and burned the child’s private parts, leaving the family stunned… pic.twitter.com/YNOradThbh
— IndiaToday (@IndiaToday) July 27, 2026
ஆத்திரமடைந்த ஆசிரியை, 5 வயது சிறுவனின் அந்தரங்க உறுப்பில் கொடூரமாகச் சூடு வைத்துச் சித்திரவதையில் ஈடுபட்டுள்ளார். வலி தாங்க முடியாமல் சிறுவன் கதறி அழுது வீட்டை அடைந்ததும், நடந்த கொடூரத்தைக் கண்டு பெற்றோர் பேரதிர்ச்சியடைந்தனர். பள்ளியில் வைத்துத் தனது மகனை மிகக் கொடூரமாகத் தாக்கிச் சூடு வைத்த ஆசிரியை மீது பெற்றோர் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரிப் போலீசில் புகார் அளித்தனர்.
![]()
பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிஞ்சுச் சிறுவன் என்றும் பாராமல் கொடூரமாக நடந்து கொண்ட ஆசிரியை மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. கல்வி கற்பிக்கும் இடத்தில் 5 வயது சிறுவனுக்கு நேர்ந்த இந்தச் சித்திரவதை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
