பாரிஸ் ஒலிம்பிக்: 10 நாட்களில் வெளுத்துப் போன வெண்கலப் பதக்கம்... கலாய்க்கும் நெட்டிசன்கள்!
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வழங்கப்பட்ட வெண்கலப் பதக்கம், அடுத்த 10 நாட்களில் நிறம் மங்கி, வெளுத்துப் போயிருப்பதை அமெரிக்காவின் நைஜா ஹஸ்டன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
கடந்த ஜூலை 29ம் தேதியன்று நடந்த ஆண்களுக்கான ஸ்கேட்போர்டிங் இறுதிப் போட்டியில் ஹஸ்டன் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். தொழிலாளர்களின் எதிர்ப்புகள், பிரெஞ்சு விளையாட்டு வீரர்களுக்கு ஹிஜாப் தடை, விளையாட்டு வீரர்களுக்கு ஏஸி அரை இல்லாதது, பல வீரர்கள் பங்கேற்ற மாசுபட்ட சீன் நதிகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு இறைச்சி உணவு பற்றாக்குறை என பாரிஸ் ஒலிம்பிக் கமிட்டி எடுத்த தவறான நடவடிக்கைகளின் குளறுபடிகளின் லிஸ்ட் நீள்கிறது. ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைய இன்னும் 3 நாட்கள் உள்ளன. அதற்குள் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வீரர்களின் பதக்கங்கள் வெளுத்துப் போவதாக தெரிய வந்துள்ளது விளையாட்டு வீரர்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது அனைத்து விளையாட்டு வீரர்களின் கனவாக உள்ளது. அதாவது பதக்கத்தின் தரம் காலங்களைக் கடந்தும் நிற்க வேண்டும் என்பதையே வீரர்கள் விரும்புவார்கள். ஏற்கனவே, பதக்கங்கள் தங்கம், வெள்ளி அல்லது வெண்கலத்தால் ஆனவை அல்ல, அதனால் அவர்களுக்கு சொந்தமாக பண மதிப்பு இல்லை. ஆனால் தங்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி பதக்கம் வெல்வதன் மூலம் அதை நிறைவேற்றுவது விளையாட்டு வீரர்களின் வாழ்நாள் கனவு.
தங்களது பேரக்குழந்தைகளுக்குக் காட்டி மகிழும் வரை பல வீரர்கள் தங்களது பதக்கங்களை நினைவுச்சின்னமாகவே வைத்திருக்க விரும்புவார்கள். ஆனால் பாரிஸ் ஒலிம்பிக்கில் வெற்றி பெற்றவர்களுக்கு அது நடக்காது என்பது அதிர்ச்சியளித்துள்ளது.

அமெரிக்காவின் நைஜா ஹஸ்டன் கடந்த ஜூலை 29ம் தேதியன்று ஆண்கள் ஸ்கேட்போர்டிங்கில் வெண்கலப் பதக்கம் வென்றார். பதக்கம் வென்று 10 நாட்களுக்குப் பிறகு, அது ஏற்கனவே தன்னுடைய நிறத்தை இழந்து வெளுக்க துவங்கியிருந்தது. இந்நிலையில், இன்று காலை ஹஸ்டன் தனது துருப்பிடித்த பதக்கத்தின் படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, அதன் தரத்தை கேலி செய்து , 'என்னுடைய பதக்கம் போருக்குச் சென்றது போல் தெரிகிறது' என்று எழுதியிருக்கிறார்.
இந்தப் பிரச்சினை வெண்கல பதக்கத்திற்கு மட்டும் நடக்குமா அல்லது தங்கம் அல்லது வெள்ளி வென்ற விளையாட்டு வீரர்களும் புகார் செய்வார்களா? என்று பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அதிக வெப்பம் நிலவும் ஆப்பிரிக்கா போன்ற இடங்களில் பதக்கம் நிலைத்து நிற்குமா அல்லது இந்தோனேசியா அல்லது கொலம்பியா போன்ற ஈரப்பதமான நாடுகளில் பதக்கம் நிலைத்து நிற்குமா? என்றும் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
