பாரீஸ் வீதியில் எரியும் தீ… அருகே அசராமல் ஜாகிங் செய்த பெண்... வைரல் வீடியோ!

 
பாரிஸ்

 

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் போராட்டங்களால் சாலைகளில் தீப்பற்றி, கரும்புகை சூழ்ந்திருந்த நிலையில், அதைப் பொருட்படுத்தாமல் பெண் ஒருவர் ஜாகிங் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

பாரீஸ் நகரில் கடந்த அக்டோபர் 17-ம் தேதி நடந்த போராட்டங்களின்போது, சாலையில் தடுப்புகள் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அந்தச் சூழலிலும் பெண் ஒருவர் தனது ஓட்டத்தைத் தொடர்ந்த காட்சி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Dystopian Fitness Video": Video Of Woman Jogging Amid France Protests Goes Viral Online

இந்த வீடியோவைப் பார்த்த சிலர், ஆபத்தான சூழலிலும் அவர் ஜாகிங் சென்றதை விமர்சித்துள்ளனர். மற்றவர்களோ, சில விநாடிகள் கொண்ட வீடியோவை மட்டும் வைத்து அவரது நோக்கத்தைத் தீர்மானிக்கக் கூடாது என ஆதரவு தெரிவித்துள்ளனர். அந்தப் பெண் ஏன் அங்கு ஓடினார் என்பது குறித்த முழுமையான தகவல் வெளியாகவில்லை.