நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: மசோதா தோல்வியால் கூட்டத்தொடர் பாதியில் நிறைவு!

 
நாடாளுமன்றம் பாராளுமன்றம் நாடாளுமன்றம் பாராளுமன்றம்

 


மத்திய அரசு கொண்டு வந்த தொகுதி மறுவரையறை மசோதா போதிய ஆதரவின்றி தோல்வியடைந்த நிலையில், நாடாளுமன்றம் இன்று ஏப். 18 தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இன்று காலை அவை கூடிய உடனேயே, இரு அவைகளும் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். இந்த திடீர் அறிவிப்பால் நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், அரசின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

புதிய பாராளுமன்றம்

வழக்கமாக நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நிறைவு பெறும்போது தேசிய கீதம் இசைக்கப்படுவது மரபாக இருந்து வந்தது. ஆனால், முதன்முறையாக இன்று வந்தே மாதரம் பாடலுடன் கூட்டத்தொடர் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தேசிய கீதம் பாடப்படாததைக் கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். மரபுகள் மீறப்படுவதாகக் கூறி அவர்கள் முழக்கமிட்டதால் அவையில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.

சோழர் செங்கோல் பாராளுமன்றம்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த மசோதா வெற்றி பெற மொத்தம் 326 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில், அரசுக்கு ஆதரவாக 278 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. இதனால் மசோதா தோல்வி அடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மோடி தலைமையிலான அரசுக்கு நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட இந்த பின்னடைவு தேசிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கூட்டத்தொடர் முடிவடைந்ததைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் இதனைத் தங்களது வெற்றியாகக் கொண்டாடி வருகின்றனர்.