பூமியில் விழுந்த சந்திராயன் - 3 பாகம்.. இஸ்ரோ விஞ்ஞானிகள் பகிர்ந்த புதிய தகவல்..!!

 
சந்திராயன் - 3 பாகம்

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் ராக்கெட் பாகம் பூமியில் விழுந்தது. விண்ணில் ஏவப்பட்டு 124 நாட்களுக்குப் பின் வடக்கு பசிபிக் கடல்பகுதியில் ராக்கெட் பாகம் விழுந்துள்ளதாக இஸ்ரோ தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் சந்திரயான் -3 விண்கலம் எல்.வி.எம் 3 எம்.4 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 14ம் தேதி நிலவுக்கு வெற்றிகரமாக அனுப்பப்பட்டது. விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் திட்டமிட்டபடி பணிகளை செய்தது. சந்திரயான்-3 திட்டம் வெற்றி அடைந்தது. இந்நிலையில், சந்திரயான்-3 ராக்கெட்டின் ஒரு பகுதி மீண்டும் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Chandrayaan-3 back on Earth! ISRO confirms controlled disposal after  successful mission - BusinessToday

இது குறித்து இஸ்ரோ தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளாதவது:

Chandrayaan 3 Mission: Pragyan Rover came out of Vikram Lander, will study  the lunar surface for 14 days within a radius of 500 meters

சந்திரயான்-3 ராக்கெட்டின் ஒரு பகுதி மீண்டும் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்தது. ராக்கெட் ஏவப்பட்ட 124 நாட்களுக்குள் ராக்கெட் பாகம் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்துள்ளது. நேற்று நவம்பர் 15ம் தேதி இந்திய நேரப்படி மதியம் 2.42மணி அளவில் பூமியின் காற்று மண்டல பகுதிக்குள் நுழைந்தது. புவி மண்டல பகுதிக்குள் வந்த ராக்கெட் பாகம், பூமியின் ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு விழுந்திருக்கலாம். வடக்கு பசிபிக் பெருங்கடலில் ஏவுகணை விழக்கூடிய புள்ளி கணிக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

From around the web