அஜித்துக்கு பத்ம பூஷன் விருது கொடுக்க காரணமே விஜய் தான்… பார்த்திபன் பரபரப்பு!

முன்னதாக நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததை பாராட்டிய பார்த்திபன் ஆளும் கட்சிகளை விமர்சித்தால்தான் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியும் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோர் கூட இப்படித்தான் அரசியல் செய்ததாகவும் விஜய்யும் அதைத்தான் செய்கிறார். நான் எந்த கட்சியையும் சார்ந்தவன் கிடையாது யார் அரசியலுக்கு வந்தாலும் வாழ்த்துவேன் என்றார்.
அதன் பிறகு ரசிகர்களிடம் குடும்பத்தை பார்த்துக் கொள்ளுங்கள் என்று அஜித் சொன்னது குறித்த கேள்விக்கு அப்படி சொல்ல காரணமும் ஒரு ஸ்டண்டு தான் என்று கூறினார். நடிகர் அஜித்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்ட போது நடிகர் பார்த்திபன் அவருக்கு எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அவர் பாஜகவுக்கு ஆதரவு கொடுக்கவில்லை என்றால் அஜித்துக்கு பத்ம விருது கொடுப்பார்கள் எனக் கூறப்பட்ட நிலையில் நடிகர் அஜித்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. விஜய்க்கு எதிராகத்தான் அஜித்துக்கு பத்ம விருது வழங்கப்படுவதாக தமிழக அரசியல் வட்டாரத்தில் ஒரு பேச்சு அடிபட்டும் நிலையில் தற்போது நடிகர் பார்த்திபனும் அப்படித்தான் இருக்கும் எனக் கூறியது பேசும் பொருளாக மாறி உள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!