ஆகஸ்ட் 22ல் கட்சிக்கொடி அறிமுகம்... தவெக தடாலடி அறிவிப்பு!
தமிழகத்தில் நடிகர் விஜய் பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை தொடங்கி அரசியலில் கால் பதித்துள்ளார். அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு என கூறியுள்ளார். வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு நடிகர் விஜய் அறிவித்துள்ள நிலையில், கட்சியை பலப்படுத்தும் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

முதல்கட்டமாக தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடத்துவதற்கான பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக்கொடி 3 விதங்களாக வடிவமைக்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுக்கூட்டம் அல்லது மாநாடு நடத்தி கட்சிக்கொடியினை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ கட்சிக் கொடியினை ஆகஸ்ட் 22ம் தேதி, நடிகர் விஜய் அறிமுகம் செய்து வைக்க இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த கட்சிக் கொடியினை சென்னை அடுத்த பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து எளிமையான முறையில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர். கட்சியினுடைய முதல் மாநாடு செப்டம்பர் இறுதிக்குள் நடத்துவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற கொள்கையின் அடிப்படையில் விஜய், கட்சியை பலப்படுத்திவருகிறார். இதற்கு ஏற்ப அனைவரும் சமம் என்கிற வகையில் கட்சிக்கொடி இருக்க வேண்டும் என விஜய் அறிவுறுத்தி இருந்தார். இந்நிலையில் தற்போது கட்சியின் கொடியினை நடிகர் விஜய் பனையூரில் கட்சி அலுவலகத்தில் வைத்து அறிமுகம் செய்து வைக்க இருக்கிறார். தொடர்ந்து தவெகவின் முதல் மாநாட்டினையும் அடுத்த மாதம் நடத்த திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
