ஆற்றில் பாய்ந்த பயணிகள் பேருந்து.. 23 பேர் நீரில் மூழ்கி பலி! வங்கதேசத்தில் கோர விபத்து!

 
வங்கதேசம் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து வங்கதேசம் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து

வங்கதேசத்தில் நேற்று நிகழ்ந்த கோரமான பேருந்து விபத்து சர்வதேச அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பத்மா ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விழுந்ததில் 23 பயணிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

வங்கதேசத்தின் தவுலத்தியாபடகு முனையத்தில் நேற்று நிகழ்ந்த விபத்தில், 40 பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்த பேருந்து ஒன்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், பத்மா ஆற்றில் கவிழ்ந்து விழுந்தது. இதில் 23 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் மாயமாகியுள்ளனர்.

வங்கதேசம் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து

தென்மேற்குப் பகுதியிலிருந்து சுமார் 40 பயணிகளுடன் தலைநகர் டாக்கா நோக்கி ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது பத்மா ஆற்றைக் கடப்பதற்காகப் பேருந்து தவுலத்தியா முனையத்தில் உள்ள மிதவைப் பாலம் மீது ஏறியது. அந்தச் சமயத்தில், ஆற்றில் வந்த ஒரு சிறிய படகு எதிர்பாராத விதமாக மிதவைப் பாலத்தின் மீது பலமாக மோதியது. இதில் நிலைதடுமாறிய பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து ஆழமான ஆற்றுக்குள் தலைகுப்புறக் கவிழ்ந்தது.

வங்கதேசம் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து

விபத்து நடந்தவுடன் உள்ளூர் மக்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆற்றுக்குள் மூழ்கிய பேருந்திலிருந்து இதுவரை 23 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பேருந்தில் இருந்த மற்ற பயணிகளில் சிலர் நீந்தி கரை சேர்ந்தனர். எனினும், ஆற்று நீரோட்டம் அதிகமாக இருந்ததால் பலர் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மாயமானவர்களைத் தேடும் பணியில் கடற்படை மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வங்கதேச அரசு இரங்கல் தெரிவித்துள்ளதுடன், விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.