பயணிகள் கனிவான கவனத்திற்கு... ரயில் நிலையங்கள் மற்றும் பெட்டிகளில் குப்பை போட்டால் இனி ரூ1000 அபராதம்... !

 
குப்பை

ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில் பெட்டிகளில் கண்ட இடங்களில் குப்பை போடுபவர்களுக்கான அபராத தொகையை ரூ.1,000 ஆக உயர்த்தி ரெயில்வே நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய ரெயில்வேயை தூய்மையாக வைத்திருக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு முதல் ரெயில்வே விதியை மீறி குப்பை போடுபவர்கள் மற்றும் எச்சில் துப்புபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. ஆனாலும், பொது இடங்களில் குப்பைகளை வீசி வரும் சம்பவங்கள் குறைந்தபாடில்லை என்பதால் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Railway | இனி 1,000 ரூபாய் அபராதம் ரயில்கள் மற்றும் ரயில் நிலைய வளாகங்களில் குப்பை போடுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகையை ரூ.500லிருந்து ...

கடந்த ஜூன் மாதம் 20-ந்தேதி முதல் அறிவிக்கப்பட்ட இந்த அபராத தொகை உயர்வு தற்போது அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் பயணிகள் அனைவரும் ரெயில்வே வளாகங்களை தூய்மையாக வைத்திருக்க ஒத்துழைக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.