மன்னிப்பு என்ற பெயரில் எதையாவது எழுதி கொடுத்துவிட்டு தப்பிக்க முடியாது’ பதஞ்சலி பாபா ராம்தேவ் வழக்கில் நீதிபதிகள் கடும் கண்டனம்!

 
பதஞ்சலி பாபா ராம்தேவ்


தவறான விளம்பரங்கள் வெளியிட்டது குறித்து கண்டனங்களைத் தெரிவித்தும், தொடர்ந்து தவறாக மக்களை வழிநடத்தும் விதத்தில் விளம்பரங்களை வெளியிட்டது தொடர்பாக உச்சநீதிமன்றம் ஆவேசமடைந்த நிலையில், பதஞ்சலி நிறுவனத்தின் மேலாளர் பதஞ்சலி நிறுவனத்தின் சார்பாக மன்னிப்பு கோரினார்.

பதஞ்சலி பாபா ராம்தேவ்
இந்நிலையில், இன்று விசாரணைக்கு வந்த வழக்கில், விளம்பரங்களை வெளியிட்டது தொடர்பாக பதஞ்சலி நிறுவனத்தின் தலைவர் பாபா ராம்தேவ் கேட்ட நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. 
முன்னதாக கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பதஞ்சலி மருந்துகள் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பும் விளம்பரங்கள் தயாரித்த விவகாரத்தில் பாபா ராம்தேவ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்.

பதஞ்சலி பாபா ராம்தேவ்
மன்னிப்பு என்ற பெயரில் எதையாவது எழுதி கொடுத்து விட்டு தப்பித்து விடலாம் என நினைக்காதீர்கள் என பாபா ராம்தேவ் தரப்புக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம். நீங்கள் செய்திருப்பது மிகப்பெரிய நீதிமன்ற அவமதிப்பு எனவும் நீதிபதிகள் காட்டமாக கருத்து தெரிவித்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web