அதிக பூச்சிகொல்லி உஷார்... பதஞ்சலி மிளகாய் தூளை கடைகளில் கொடுத்து பணத்தை திரும்ப வாங்கிக்கோங்க...!

பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள், அழகு சாதன பொருட்கள், உணவு பொருட்கள், சுத்தப்படுத்தும் திரவியங்களை விற்பனை செய்து வருகின்றன.இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் உத்தரவை அடுத்து பதஞ்சலி நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி எஃப்எஸ்எஸ்ஐ நடத்திய ஆய்வுகளில் பதஞ்சலி நிறுவனத்தின், 200கி அளவுடைய மிளகாய்த் தூள் பாக்கெட்டுகளில் அளவுக்கதிமாக பூச்சிக்கொல்லி கலப்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இந்த 200 கிராம் மிளகாய்த்தூள் பாக்கெட்டுகளை உடனடியாக திரும்ப பெறும்படி உணவு கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி 4 டன் மிளகாய் தூள் பாக்கெட்டுகளை பதஞ்சலி நிறுவனம் திரும்ப பெறுகிறது. வாடிக்கையாளர்கள் பதஞ்சலி மிளகாய் தூள் பாக்கெட்டுகளை உடனடியாக வாங்கிய இடத்திலேயே திரும்ப ஒப்படைத்து, பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!