பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து... தொழிலாளி பலத்த காயம்!

 
pattasu

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள முத்துச்சாமிபுரம் பகுதியில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலையில் வழக்கம்போல ஏராளமான தொழிலாளர்கள் இன்று ஜூலை 31-ம் தேதி பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அறையில் இருந்த வெடிமருந்தில் திடீரெனப் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. விபத்து நடந்தவுடன் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்த தொழிலாளர்கள் அனைவரும் வெளியே ஓடிவந்தனர்.

தீ தீயணைப்பு வெடிவிபத்து பட்டாசு

இந்தத் திடீர் விபத்தில் ஆலையில் பணியாற்றிக் கொண்டிருந்த 55 வயதான சுப்பிரமணி என்ற தொழிலாளி பலத்த காயமடைந்தார். விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக தொழிலாளர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் விரைந்து செயல்பட்டு அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தியேட்டரில் பட்டாசு

இது குறித்துத் தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் விபத்துக்கான காரணம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டாசு ஆலையில் நடைபெற்ற இந்த வெடி விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.