பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் வேண்டாம்! செப்.29-ல் மீனவர்கள் போராட்டம்

 
பட்டினப்பாக்கம்

 

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, வரும் செப்டம்பர் 29-ம் தேதி மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ள நிலையில், இதற்கு அப்பகுதி மீனவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தத் திட்டத்தால் தங்களது குடியிருப்பு மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என மீனவர் அமைப்புகள் தெரிவித்து வருகின்றன.

புதிய தலைமைச் செயலகம்.. 29ஆம் தேதி மீனவர்கள் போராட்டம்

இந்த நிலையில், சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களை ஒருங்கிணைத்து செப்டம்பர் 29-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் முள்ளிக்குப்பம் சமூக நலக்கூடத்தில் நடைபெற்றதாகவும், அதனைத் தொடர்ந்து போராட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பட்டினப்பாக்கம் திட்டத்திற்கு எதிராக ஏற்கனவே மீனவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். சமீபத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் தங்களது படகுகள் மற்றும் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பை பதிவு செய்தனர். அரசாணையை திரும்பப் பெறாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்றும் மீனவர் கிராமங்களின் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

நிதி நெருக்கடிக்கு மத்தியில் புதிய தலைமைச் செயலகம் அவசியம் தானா? | Is a new Secretariat necessary amidst the financial crisis?

இதற்கிடையே, இந்த திட்டத்தை கைவிட வலியுறுத்தி அரசியல் கட்சிகளும் குரல் எழுப்பி வருகின்றன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஏற்கனவே பட்டினப்பாக்கத்தில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.திமுகவும் மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.இதனால் பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலகத் திட்டம் தொடர்பான எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், செப்டம்பர் 29-ம் தேதி நடைபெற உள்ள மீனவர்களின் ஆர்ப்பாட்டம் கவனம் பெற்றுள்ளது.