ஒரே நாளில் 350 வாகனங்களில் குவிந்த நிலக்கடலை ... விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்!

 
நிலக்கடலை

 

குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ஹாபா மார்க்கெட்டிங் யார்டில் நிலக்கடலைக்கு நல்ல விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Groundnut

இந்த சந்தைக்கு ஒரே நாளில் 350 வாகனங்கள் மூலம் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூட்டை நிலக்கடலை விற்பனைக்காகக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் சந்தையில் ஏல நடவடிக்கைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

நிலக்கடலைக்கான தேவை அதிகரித்துள்ளதால் அதன் விலையும் உயர்ந்துள்ளது. குறிப்பாக, 9-ம் ரக நிலக்கடலை அதிகபட்சமாக ரூ.2,775 வரை விற்பனையாகியுள்ளது. 6-ம் ரக நிலக்கடலை ரூ.2,400-க்கும் அதிகமான விலைக்கு விற்பனையாகி வருகிறது.

நிலக்கடலை!

இதுகுறித்து ஹாபா மார்க்கெட்டிங் யார்டு செயலாளர் ஹிதேஷ் படேல் கூறுகையில், நிலக்கடலை வரத்து அதிகரித்துள்ளதால் ஏலப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.அதிக வரத்து காரணமாக புதிய நிலக்கடலை வரத்துக்கு தற்காலிகமாக கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.