மீண்டும் பெகட்ரான் பாக்ஸ்கான் வந்துச்சு !!

 
வணிகம்


இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் தொழில்துறையின் முக்கிய கேந்திரமாக தமிழகம் மாறிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளைச் சுற்றிலும் சிறிய பெரிய அளவில் எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலைகள் செயல்படத் தொடங்கியுள்ளன.இதில்,ஆப்பிள் நிறுவனத்துக்கு செல்போன் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்து கொடுக்கும் பணியில் தைவானின் பாக்ஸ்கான்,

வணிகம்

பெகட்ரான் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. பாக்ஸ்கான் ஸ்ரீபெரும்புதுார் பகுதியிலும், பெகட்ரான் மகேந்திரா வேர்ல்ட் சிட்டி பகுதியிலும் தங்கள் தொழிற்சாலைகளை அமைத் துள்ளன. இந்நிலையில், பெகட்ரான் தன் தொழிற் சாலை விரிவாக்கம் தொடர்பாக கடந்தவாரத்தில் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்நிலையில், மற்றொரு முன்னணி நிறுவனமான பாக்ஸ்கான், ஸ்ரீபெரும்புதுார் பகுதியில், ஆப்பிள் போனுக்கான பாகங்கள் தயாரித்துக் கொடுக்கும் பணியில் உள்ள நிலையில், தன் தொழிலை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

சிப் தயாரிப்பில் ரூபாய் 8,195 கோடி முதலீடு !! சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிப் தயாரிப்பு நிறுவனமான பாலி மேடெக், சிப் தயாரிப்புத் தொழிலில் ஒரு பில்லியன் டாலர் அதாவது ஆயிரத்து 195 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக தெரி வித்துள்ளது.இது தொடர்பாக இந் நிறுவனத்தின் தலைவர் ஈஸ்வரராவ் நத்தம் கூறியதாவது... சிப் தயாரிப்புத்தொழிலில் வரும் 2026ம் ஆண்டுக்குள் ஆயிரத்து 195 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்து, தொழில் விரிவாக்கம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளோம். இதில் சிப் தயாரிப்பு மட்டுமின்றி, செமி கண்டக்டர் உற்பத்தியும் இடம் பெறும். இப்போதைய சூழலில் எங்கள் நிறுவனம் ஆண்டுக்கு 30 கோடி சிப்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது. இது அடுத்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் ஆண்டுக்கு ஆயிரம் கோடி சிப்கள் என்ற உற்பத்தி இலக்கை எட்டும் எங்களது தொழிற்சாலை சென்னையில் உள்ளது. எங்களது அடுத்த  உற்பத்தி தொழிற்சாலைகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைகிறது. இந்தத் தொழிற்சாலையில் இருந்து செப்டம்பரில் இருந்து உற்பத்தித் தொடங்கும். இதற்கான அடிப்படை கட்டமைப்புப் பணிகள் முடித்துள்ளன. இந்த முயற்சியால் வரும் டிசம்பர் இறுதிக்குள் எங்கள் நிறுவனத்தின் சிப் உற்பத்தி 200 கோடி என்ற இலக்கை எட்டும். இப்போது நாங்கள் உற்பத்தி செய்யும் ஆப்டோ செமி கண்டக்டர்கள், சிப் ஆகியவை மின் விளக்கு கள் உற்பத்தி, மருத்துவ கருவிகள் உருவாக்கம், உணவு சுத்திகரிப்பான் மற்றும் பாதுகாக்கும் தொழிற் துறைகள் என்று பல்வேறு துறைகளிலும் பயன்ப டுத்தப்படுகிறது.இதனால், தேவை அதிகம் உள்ளதால், விரைவில் சந்தை விரிவாக்கம் நிகழ்கிறது என்றார். இப்போது இந்தியாவில் செமிகண்டக்டர் மற்றும் சிப் தயாரிப்புத் தொழில் தோராயமாக 110 லட்சம் கோடி ரூபாய் என்ற சந்தை மதிப்பைக் கொண்டுள்ளது. வரும் 2030ம் ஆண்டில் இதன் சந்தை மதிப்பு 180 லட்சம் கோடியே 30 லட்சத்து 210 கோடி ரூபாயாக இருக்கும் என்கின்றனர் சந்தை வல்லுநர்கள்
இதற்காக மத்திய அரசிடம் ஏற்கனவே பேசியுள்ள நிலையில், தொழில் விரிவாக்கம் தொடர்பாக கடந்த வாரத்தில் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் பாக்ஸ்கான் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இந்தமுறை ஆயிரத்து 400 கோடி ரூபாய் முதல் ஆயிரத்து 600 கோடி ரூபாய் வரை பாக்ஸ்கான் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக, இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், புதிதாக பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web