இனி க்யூஆர்கோடு, யுபிஐ மூலம் அபராதம் கட்டலாம்... போக்குவரத்து காவல்துறை!
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் போக்குவரத்து காவல்துறை அபராதம் செலுத்த புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி UPI மூலம் பணம் செலுத்த வசதிகளை மேம்படுத்தியுள்ளது. 2011 ம் ஆண்டுக்கு பிறகு போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறையில் புதிய மேம்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. நேரடியாக பணம் செலுத்தும் முறையில் இருந்து இ-சலான் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அடுத்தபடியாக 2017ம் ஆண்டில் பணமில்லா பணவரித்தனை மூலம் போக்குவரத்து சலான்களுக்கான அபராத தொகையை எளிதாக செலுத்துவதற்கு பல்வேறு வசதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, டெபிட்/கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி பணம் செலுத்துதல், Paytm ஆப் மூலம் பணம் செலுத்துதல், தபால் நிலையங்களில் பணம் செலுத்துதல், TN e-Sevai மையங்களில் பணம் செலுத்துதல் உட்பட ஏற்கனவே சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை மூலம் வழங்கிய போக்குவரத்து சலான்களின் கட்டணங்களுக்கு பணம் செலுத்தும் நடைமுறையில் இருந்தன.
தற்போது சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் SBI மூலம் UPI ID/QR குறியீடு மூலம் பணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய முறையில் பணம் செலுத்த, பயனர்கள் புதிய இணையத்தளமும் அறிமுகப்படுத்தியுள்ளனர். https://echallan.parivahan.gov.in/index/accused-challan இந்த இணையதளத்தில் UPI ID/QR குறியீடு பணம் செலுத்தலாம். சலான் எண், வாகன பதிவு. எண் அல்லது ஓட்டுநர் உரிம எண்ணை உட்பட வேண்டும்

பட்டியலிடப்பட்ட சலான் அருகே "இப்போது பணம் செலுத்து" விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். SBI ePay பக்கத்தில் UPI பயன்முறையைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த முயற்சியின் மூலம், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை ஆன்லைன் டிஜிட்டல் கட்டண சேவை முறைகளை மேம்படுத்தியுள்ளது. இது வாகன ஓட்டிகள் தங்கள் அபராதத் தொகையை ஆன்லைன் தளங்கள் மூலம் எளிதாக செலுத்துவதற்கு வசதியாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.
