மக்களே உஷார்.. அதிகரிக்க போகும் டெங்கு பாதிப்பு.. பகீர் கிளப்பும் அமைச்சர்..!!

சென்னையில் ஹெல்த் வாக் சாலையை மருத்துவத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் நவ.4 -ஆம் தேதி 38 மாவட்டங்களில் 8 கிலோ மீட்ட கொண்ட ஹெல்த் வாக் சாலை தொடங்கப்படவுள்ளது. பெசன்ட் நகரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் வசதிக்காக காலை 5 முதல் 8 மணி வரை பெசன் நகர் அவன்யூ பகுதி சாலைகளில கனரக வாகனங்கள் வந்து செல்ல அனுமதி இல்லை.
மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை சுகாதாரத் துறையின் சார்பில் ஹெல்த் வாக் நடைபெறும் இடங்களில் மருத்துவ முகாமும் நடைபெற உள்ளது. கொரோனா காலத்திற்குப் பிறகு சமீபகாலமாக இளம் வயதினர் உள்பட பலருக்கு மாரடைப்பு அதிகரித்து வருகிறது. மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்பு அதிகரித்துள்ள நிலையில் நடைபயிற்சியும், உடற்பயிற்சியும் அவசியம்.
மேலும் கடந்த பத்து மாதங்களில் 5,600 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் இறந்துள்ளனர். வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.