மக்களே உஷார்.. அண்டை மாநிலத்தில் அதி வேகத்தில் பரவும் ஜிகா வைரஸ்..!!

 
ஜிகா வைரஸ்

கர்நாடக மாநிலம் சிக்கபள்ளபூர் மாவட்டத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட கொசுக்களின் மாதிரியில் ஜிகா வைரஸ் மாநிலம் முழுவதும்
பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு  சித்லகட்டா தாலுகா, தலகயலபேட்டா கிராமத்தில் கடந்த செப்டம்பர் மாதம் சேகரிக்கப்பட்ட கொசுக்களின் மாதிரியில் ஜிகா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் சிக்கபள்ளபூர் பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்கும் சென்று வருகிறார்கள். இந்த நிலையில், ஜிகா வைரஸ் தடுப்பு எச்சரிக்கைகள் மாநிலம் முழுவதும் விடுக்கப்பட்டுள்ளது.

Zika virus detected in Karnataka's Chikkaballapura, health officials  clarify there are 'no cases in humans' - The South First

மாநிலம் முழுவதும் 68 இடங்களில், பல்வேறு வகைகளிலும் கொசுக்களின் மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டதில் ஜிகா வைரஸ் கடந்த ஒரு சில மாதங்களாகவே பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. காய்ச்சலோடு வந்த மூன்று பேரை பரிசோதித்ததில் அவர்களுக்கும் ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Karnataka steps up surveillance after detection of Zika virus in mosquito  pool in Chickballapur - The Hindu

ஏடிஸ் வகை கொசுக்கள் மூலமாக ஜிகா வைரஸ் பரவுகிறது. தோலில் தடிப்புகள், காய்ச்சல், வயிற்று உபாதை, தசை, மூட்டுகளில் வலி, தலைவலி போன்றவை ஜிகா வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகளாகும். தற்போதுவரை இதனைத் தடுக்க தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. சிறப்பு சிகிச்சைகளும் இதுவரை எதுவும் இல்லை.

From around the web