மக்களே உஷார்...!! வடையில் இறந்து கிடந்த பல்லி - உணவகத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்!

 
வடை பல்லி உணவகம் சீல்

கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் பகுதியில் இயங்கி வந்த பிரபல உணவகம் ஒன்றில், வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட வடையில் பல்லி இறந்து கிடந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீல் பிரியாணி மருத்துவமனை வாந்தி மயக்கம்

இறச்சகுளத்தில் செயல்பட்டு வரும் அந்த உணவகத்தில் வாங்கிய வடையில் பல்லி இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நுகர்வோர் ஒருவர், அதனைப் புகைப்படம் மற்றும் வீடியோவாக எடுத்துச் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

பல்லி

இணையத்தில் பரவிய வீடியோவின் அடிப்படையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உடனடியாக அந்த உணவகத்திற்கு நேரில் சென்று   ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது, உணவகத்தின் சமையலறைப் பகுதி மிகவும் சுகாதாரமற்று அசுத்தமான முறையில் பராமரிக்கப்படுவது அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டது. மேலும், உணவு பாதுகாப்பு விதிகளைத் தீவிரமாக மீறி பொதுமக்களின் உடல்நலத்திற்குப் பேராபத்து விளைவிக்கும் வகையில் செயல்பட்ட குற்றத்திற்காக, அந்த உணவகத்திற்கு அதிகாரிகள் தற்காலிகமாகச் சீல் வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். உணவுப் பொருட்களின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்த தொடர் புகார்களை அடுத்து இத்தகைய அதிரடிச் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.