மக்களே உஷார்... தமிழகம் முழுவதும் 266 மருந்தகங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து!

 
மாத்திரை மருந்து

தமிழகம் முழுவதுமாக 266 மருந்தகங்களின் உரிமம், மருத்துவர்களின் பரிந்துரை சீட்டுக்கள் இன்றி, முக்கியமான மருந்துகளை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்ததன் காரணமாக தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 40,000க்கும் மேற்பட்ட மருந்தகங்களும், 100க்கும் மேற்பட்ட மருந்து உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்குநகத்தால் கண்காணிக்கப்பட்டு வரப்படுகின்றன.

மாத்திரை மருந்து

இந்நிலையில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் கருத்தடை மற்றும் தூக்க மாத்திரைகளை விற்பனை செய்த 31 மருந்தகங்களின் உரிமம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே போன்று 56 மொத்த விற்பனை நிறுவனங்களின் உரிமைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மருந்து கடைகளில் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்து விற்பனை செய்வது தவறானது. குறிப்பாக மனநலம் , தூக்கம், கருக்கலைப்பு மாத்திரைள் போன்ற மருந்துகளை இப்படி மருத்துவரின் பரிந்துரை சீட்டுக்கள் இல்லாமல் விற்பனை செய்வது சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும்.

மருந்து மாத்திரைகள்

இப்படி முறைகேடுகள் கண்டறியப்பட்ட மருந்தகங்களின் உரிமங்கள் தற்காலிகமாக அல்லது முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!