தமிழகம் முழுவதும் இறைச்சி வாங்க குவிந்த மக்கள்... அதிகாலையிலேயே கடைகளில் நீண்ட வரிசை!

 
கறி இறைச்சி அசைவம் தீபாவளி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இறைச்சிக் கடைகளில் இன்று காலை முதலே மக்கள் கூட்டம் அதிகரித்தது. சென்னை, திருச்சி, கோவை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும், கிராமப்புறங்களிலும் பொதுமக்கள் கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து சிக்கன், மட்டன் வாங்கிச் சென்றனர்.

மீன் மீன்கள் இறைச்சி மீனவர்கள

மட்டன் விலை கிலோ ரூ.1,000-ஐத் தாண்டியும், சிக்கன் விலை கிலோ ரூ.280 முதல் ரூ.300 வரையிலும் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு இறைச்சிக்கான தேவை அதிகரித்துள்ளதால் சில பகுதிகளில் விலையும் உயர்ந்துள்ளதாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர். திருச்சியிலும் மட்டன் கிலோ ரூ.1,000-க்கு மேல் விற்பனையானது.

நாமக்கல்லில் முட்டைக்கான கொள்முதல் விலை ஒரு முட்டைக்கு ரூ.6.70 ஆக உள்ளது. சில்லறைக் கடைகளில் விற்பனை விலை ரூ.8 வரை இருக்கலாம்.