பெரும் பரபரப்பு.. அரசு பேருந்தை வழி மறித்து ஓட்டுநரை சரமாரியாக வெட்டிய மர்ம நபர்கள்..!!

 
 ஓட்டுநர் ரெஜின்

அம்பாசமுத்திரம் அருகே  அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் தகராறு செய்து, அரிவாளால் தாக்கிய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அம்பாசமுத்திரம் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு

நெல்லையில் நேற்று இரவு கல்லிடைக்குறிச்சி பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்த பேருந்தை சிலர் வழிமறித்தபோது, ஓட்டுநர் ரெஜின் சிறிது தூரம் தள்ளி சென்று பேருந்தை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள், ரெஜினிடம் வாக்குவாதம் செய்து அரிவாளால் தாக்கியுள்ளனர். தாக்குதல் நடத்திய நபர்கள் அரிவாளுடன் தப்பிச் செல்லும் காட்சி அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 

இந்நிலையில், குற்றவாளிகளை கைது செய்யக்கோரி, பாபநாசம் பணிமனை போக்குவரத்து ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய நிலையில், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

From around the web