பாகிஸ்தானில் கதறும் மக்கள்... கனமழைக்கு 23 குழந்தைகள் உட்பட 45 பேர் பலி - 400-க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டம்!

 
பாகிஸ்தான் கனமழை வெள்ளம் பாகிஸ்தான் கனமழை வெள்ளம்

பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபர்பக்துன்க்வாவில் (கடந்த மார்ச் 25-ஆம் தேதி முதல் இடைவிடாது பெய்து வரும் கனமழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. மழை மற்றும் வெள்ளம் தொடர்பான விபத்துகளில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45-ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 23 பேர் சிறுவர்கள் என்பது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான்

சுவர் இடிந்து விழுந்தது மற்றும் மின்சாரம் தாக்கியது போன்ற விபத்துகளில் சிக்கி இதுவரை 105 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கனமழையினால் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன: சுமார் 60 வீடுகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. 382 வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன. மொத்தமாக 442 வீடுகள் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் கனமழை

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மழையினால் வீடுகளை இழந்தவர்களுக்குத் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு, உணவு மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. எனினும், தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. வரும் நாட்களிலும் மழை நீடிக்கும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.